நாட்டில் மின்துண்டிப்பு அமுலாகும் காலப்பகுதியினை அதிகரிக்க தீர்மானம்

Reha
4 years ago
நாட்டில் மின்துண்டிப்பு அமுலாகும் காலப்பகுதியினை அதிகரிக்க தீர்மானம்

நாட்டில் மின்துண்டிப்பு அமுலாகும் காலப்பகுதியினை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ABCDEFGHIJKLPQRSTUVW போன்ற வலயங்களில் 3 மணி நேரம் மின்துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணி நேரமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், கொழும்பு நகர் பகுதிகளில் எதிர்வரும் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் காலை 6 மணிமுதல், 8 மணிவரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலயங்கள் மின் துண்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தினங்களில் MNOXYZ ஆகிய வலயங்களில் அதிகாலை 5 மணிமுதல் 8 மணிவரையான காலப்பகுதியில் 3 மணிநேரம் மின் துண்டிக்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4