அரச நிறுவனங்களில் மட்டுப்படுத்தப்பட்ட பணிக்குழாமினரைக் கொண்டு சேவைகளை முன்னெடுக்க தீர்மானம்!
Reha
2 years ago

அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை வீழ்ச்சியடையாது தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்காக மட்டுப்படுத்தப்பட்ட பணிக்குழாமினரை கொண்டு சேவைகளை முன்னெடுப்பதற்கான சுற்று நிருபம் ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, எவ்வித இடையூறும் இன்றி நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேவையான குறைந்தபட்ச ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இயன்ற வரையில் சேவையாளர்களை வீட்டில் இருந்தவாறே பணியாற்ற அனுமதிக்குமாறும் குறித்த சுற்றறிக்கை மூலம் நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



