இலங்கையில் வலுக்கும் நெருக்கடி - முற்றாக நிறுத்தப்பட்டவுள்ள எரிபொருள் விநியோகம் !

Nila
4 years ago
இலங்கையில் வலுக்கும் நெருக்கடி - முற்றாக நிறுத்தப்பட்டவுள்ள  எரிபொருள் விநியோகம் !

இன்று நண்பகல் 12 மணியுடன் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அன்றைய தினம் எரிபொருள் போக்குவரத்து இருக்காது எனவும், அதன்படி திங்கட்கிழமை வரை எரிபொருள் போக்குவரத்து நடைபெறாது எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று காலை எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்ட வாகனங்களைத் தவிர வேறு பௌசர்களும் செல்லாது என சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை, திட்டமிடப்பட்ட எரிபொருள் தாங்கி கப்பல்கள் இலங்கைக்கு வருவது தாமதமாகும் எனவும், அவை இலங்கைக்கு வருவதற்கான திகதியை உறுதிப்படுத்த முடியாது எனவும், எனவே எதிர்வரும் காலங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விடுவிக்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4