இன்று பிற்பகல் 2.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க தீர்மானம்!

Reha
4 years ago
இன்று பிற்பகல் 2.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில்   எரிபொருள் விலைகளை அதிகரிக்க தீர்மானம்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (26) பிற்பகல் 2.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளது.

அதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், புதிய விலை 470 ரூபாவாகும்.

95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 550 ரூபாவாகும்.

இதேவேளை ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 460 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசலின் விலை 75 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 520 ரூபாவாக விலைகளில் இவ்வாறு திருத்தம் செய்யப்படவுள்ளன.

இதேவேளை, லங்கா ஐ.ஓ.சியும் சிபெட்கோ விலை அதிகரிப்புக்கு நிகராக எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4