கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று 10 மணித்தியால நீர் வெட்டு!

Prabha Praneetha
4 years ago
கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று 10 மணித்தியால நீர் வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று  இரவு 10 மணி முதல் 10 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், கோட்டை, புறக்கோட்டை, பெத்தகான, மிரிஹான, மாதிவெல, தலபத்பிட்டிய, உடஹமுல்ல, எம்புல்தெனிய, நுகேகொட, பாகொட, விஜேராம சந்தியில் இருந்து 7ஆம் மைல் தூண் வரை மற்றும் அந்த பகுதியின் ஹைலெவல் வீதியின் அனைத்து குறுக்கு வீதிகள், நுகேகொட சந்தியிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பகுதி மற்றும் கிளை வீதிகளில் நீர் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை காலை 08:00 மணி வரை இடைநிறுத்தப்படவுள்ளது.

அவசர திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4