இலங்கை அரசாங்கம் உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே தேர்தல்! பிரதமர் அறிவிப்பு

Nila
4 years ago
இலங்கை அரசாங்கம் உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே தேர்தல்! பிரதமர் அறிவிப்பு

அரசாங்கம் உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிய தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

விசேட அறிக்கையை வெளியிட்டு பிரதமர் இதனை தெரிவித்தார்.

மேலும் மிக முக்கியமான பிரச் னைகளுக்குத் தீர்வு காணப்பட்டவுடன், பொருத்தமான 225 பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்வதற்கு பொதுமக்களுக்கு

வாய்ப்புகள் வழங்கப்படவேண்டுமெனவும், அவர்களை தெரிவு செய்யும் பொறுப்பும் அதிகாரமும் பொதுமக்களுக்கு உள்ளது எனவும் பிரதமர் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

அத்துடன் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக உள்ளோம் என்பதை அரசியல்வாதிகளும், ஒட்டு மொத்த மக்களும் உலகுக்கு நிரூபிக்க வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4