வங்குரோத்து அரசியலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தாம் பெரும் விரக்தி நிலையில் இருப்பதாக சஜித் குற்றச்சாட்டு!

Reha
4 years ago
வங்குரோத்து அரசியலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தாம் பெரும் விரக்தி நிலையில் இருப்பதாக சஜித் குற்றச்சாட்டு!

நாட்டில் நெருக்கடியான சூழ்நிலையிலும் கிரிக்கெட் போட்டிக்காக இலங்கை வந்த அவுஸ்திரேலிய அணிக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மஞ்சள் ஆடை அணிந்து இறுதிப் போட்டிகளை பார்வையிட ஏற்பாடு செய்த நிகழ்வை,வங்குரோத்து அரசியலில் ஈடுபடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளிகளால் தமது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்ற முன்னெடுப்பதற்காக அதனைப் பயன்படுத்துவதை வன்மையாக கண்டிப்பதாகவும், இந்த மாபெரும் வெற்றிக்காக ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியில் இருக்கும் இந்நேரத்தில், வங்குரோத்து அரசியலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தாம் பெரும் விரக்தி நிலையே இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். 

நெருக்கடியான நிலையிலும் இலங்கை வந்ததற்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும், அந்நாட்டு அரசுக்கும், அவுஸ்திரேலியா மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், இவர்களின் வருகை ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நமது நாட்டின் மீது விதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணத் தடையை நீக்கிவிட்டு மீண்டும் எமது நாட்டுக்கு வருமாறு வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

அவ்வாறே, இலங்கை கிரிக்கெட் அணியின் சாதனைகள் குறித்து பெருமை கொள்வதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மனப்பூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வை அரசியல்மயமாக்க முயற்சிக்கும் மொட்டுக்கட்சியின் அரசியல்வாதிகள் மற்றும் பிற துணை அலைவரிசைகளின் முயற்சிகளை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4