பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள வீதி மூடப்பட்டுள்ளது

Kanimoli
4 years ago
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள வீதி மூடப்பட்டுள்ளது

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள வீதி மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கொழும்பு பிளவர் வீதி பகுதியே இவ்வாறு பொலிஸாரால் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு முன்னால் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தலைமையிலான பெண்கள் குழுவினரே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தாய்மாரின் போராட்டம் என்ற கருப்பொருளில் இந்த முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

இந்த நிலையிலேயே குறித்த வீதி மூடப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4