பெற்றோல் விநியோகம் நாளை மறுதினம் வழமைக்கு திரும்பும்

Kanimoli
4 years ago
பெற்றோல் விநியோகம் நாளை மறுதினம் வழமைக்கு திரும்பும்

பெற்றோல் விநியோகம் நாளை மறுதினம் வழமைக்கு திரும்பும் என இலங்கை பெற்றோலிய தனியார் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பெற்றோல் ஏற்றிய கப்பலொன்று நாளை இலங்கைக்கு வரவுள்ள நிலையில், பெற்றோல் விநியோகம் நாளை மறுதினம் வழமைக்கு திரும்பும் என அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, டீசல் ஏற்றிய கப்பல் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4