பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு ஜனாதிபதிக்கு பதிலாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பங்கேற்பு

Kanimoli
4 years ago
 பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு ஜனாதிபதிக்கு பதிலாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பங்கேற்பு

  ருவண்டாவின் - கீகாலி நகரில் இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பதிலாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கலந்துகொள்ளவுள்ளார்.

மாநாட்டில் 54 நாடுகள் பங்கேற்கவுள்ள நிலையில் இன்று முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை பொதுநலவாய நாடுகளின் அமர்வு இடம்பெறவுள்ளது.

அதேவேளை கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த மாநாடு நடைபெறவிருந்தது.

எனினும், கொவிட்-19 பரவல் காரணமாக இரண்டு வருட காலமாக பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4