சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருளைப் பெறுவதற்கான விசேட பொறிமுறை: கெஹலிய

Prabha Praneetha
4 years ago
சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருளைப் பெறுவதற்கான விசேட பொறிமுறை: கெஹலிய

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் சுகாதார ஊழியர்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு விசேட பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார ஊழியர்கள் நாடு முழுவதும் உள்ள நியமிக்கப்பட்ட நிரப்பு நிலையங்களில் வெள்ளிக்கிழமைகளில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருளை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்வதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த பொறிமுறையை அறிமுகப்படுத்தியதாக அவர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அடையாளச் சான்றிதழாக நிரப்பு நிலையத்தில் ஆஜர்படுத்துவதற்காக குறிப்பிட்ட சுகாதார நிறுவனத்தின் பணியாளர் என தனிநபர் சான்றளிக்கும் கடிதத்தை வழங்குமாறு அனைத்து சுகாதார நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கியதாக நியமிக்கப்பட்ட நிரப்பு நிலையங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4