கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 543 கிலோ கிராம் கேரளக் கஞ்சா

Prabha Praneetha
4 years ago
 கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 543 கிலோ கிராம் கேரளக் கஞ்சா

உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியபாடு கடற்பிரதேசத்தில் இருந்து 543 கிலோ கிராம் கேரளக் கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சாவின் மொத்த பெறுமதி 120 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

வடமேற்கு கடற்படை கட்டளையின் புத்தளம் தம்பபண்ணி கடற்படையினர் ​நேற்று வழமை போல உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சின்னப்பாடு - பெரியபாடு கடற்பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, கடலில் சில பொதி செய்யப்பட்ட சில மூடைகள் மிதந்துபொண்டு வருவதனை அவதானித்த கடற்படையினர் அதனை கைப்பற்றி பார்வையிட்டுள்ளனர்.

இதன்போதே, கேரளக் கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடலில் மிதந்து வந்த அனைத்து பொதிகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4