சஜித் மக்களுக்கு இன்று விசேட உரை

Prabha Praneetha
4 years ago
சஜித் மக்களுக்கு இன்று விசேட உரை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையின் கீழ் எதிர்க்கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சஜித் நாட்டு மக்களை தெளிவுப்படுத்தவுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடனும், போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

விரைவில் சர்வகட்சி அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அதற்கான முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கொழும்பு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4