இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் - பிரதமருக்கு இடையில் கலந்துரையாடல் ஆரம்பம்

Nila
4 years ago
இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் - பிரதமருக்கு இடையில் கலந்துரையாடல் ஆரம்பம்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்றைய தினம் இலங்கைக்கு வருகை தந்திருந்தது.

இந்நிலையில், அதன் பிரதிநிதிகள் 10 பேருடன் கலந்துரையாடல் ஆரம்மாகியுள்ளது.

இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல், இணையவழியில் அண்மையில் இடம்பெற்றிருந்தது.

அதற்கு முன்னதாக, இலங்கை அதிகாரிகள் குழுவினர், அமெரிக்காவுக்கு சென்று, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், ஒருவாரம் நாட்டில் தங்கியிருந்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4