கிலோ மீற்றருக்கும் அதிகமான நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

Prabha Praneetha
4 years ago
கிலோ மீற்றருக்கும் அதிகமான நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், மக்கள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் கிலோ மீற்றருக்கும் அதிகமான நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதேவேளை, நாளாந்த எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட மோசடிகள் காரணமாக அமைதியற்ற நிலைமை ஏற்பட்டிருந்தன.

எரிபொருள் கோரி வீதி மறியல் போராட்டமும் சில பகுதிகளில் இடம்பெற்று வருகிறது.

இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளை இன்று மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இன்று வழமை போன்று பரீட்சை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும், பங்குபற்றும் ஆசிரியர்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு முன்னுரிமை வழங்குமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தியக் கடனுதவின் கீழ் இலங்கை வந்துள்ள இறுதி டீசல் கப்பலில் இருந்து 40,000 மெட்ரிக் தொன் எரிபொருளை இறக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதனிடையே, சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடம்பெறாமையினால் பொதுமக்கள் தொடர்ந்தும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4