எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர மோதல்..9 பொலிஸார் காயம்

Prathees
4 years ago
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர மோதல்..9 பொலிஸார் காயம்

அதுருகிரிய பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நேற்று இரவு கலவரம் ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த கையிருப்புக்கள் தீர்ந்துவிட்டதாகக் கூறியதையடுத்து, பொலிஸாருக்கும், எரிபொருள் எடுக்க வந்தவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சிலர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது அத்துமீறி நுழைந்து பொலிஸ் அதிகாரிகளை தாக்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்ததாகவும், சம்பவம் தொடர்பில் ஒன்பது பேரை கைது செய்ததாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் 9 பொலிசார் காயமடைந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4