பெண் ஒருவரினால் களனி ஆற்றில் வீசப்பட்ட சிறுவன் வைக்கால் கடற்கரையில் சடலமாக மீட்பு?

Reha
4 years ago
பெண் ஒருவரினால் களனி ஆற்றில் வீசப்பட்ட சிறுவன் வைக்கால் கடற்கரையில் சடலமாக மீட்பு?

சிலாபம் - வென்னப்புவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட வைக்கால் கடற்கரையில் கரையொதுங்கியிருந்த நிலையில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சடலம், வத்தளை - கதிரான பாலத்திலிருந்து பெண் ஒருவரினால் களனி ஆற்றில் வீசப்பட்டதாக கூறப்படும் 5 வயது சிறுவனுடையதாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 15 ஆம் திகதி வத்தளை - ஹெந்தல - கதிரான பாலத்துக்கு அருகில்  களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனை வீசிவிட்டு, தனது உயிரையும் மாய்த்துக்கொள்ள முற்பட்ட தாயொருவர் பிரதேசவாசிகளால் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதனையடுத்து, அவர் வத்தளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4