கிளிநொச்சியில் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், காவல்துறையில் முறைப்பாடு பதிவு

Kanimoli
4 years ago
கிளிநொச்சியில் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், காவல்துறையில் முறைப்பாடு பதிவு

கிளிநொச்சி இலக்கம் 72 / A கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த உதயராஜ் அம்சவர்த்தன் (வயது 19) என்ற இளைஞனே காணாமல் போயுள்ளார்.

மேற்படி இளைஞன் நேற்று (16) காலை 7 மணிக்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள தொழில்பயிற்சி நிலையம் ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது தாயாரான உதயராஜ் றோஜா தெரிவித்துள்ளார்

காணாமல் போன தனது மகன் தொடர்பில் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனது கணவர் உதயராஜ் 26-12-2005 அன்று யாழ். சாவகச்சேரி மீசாலையில் வைத்து அரச படைகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.

இன்றுவரை அவர் தொடர்பில் எந்த தகவலும் தெரியாத நிலையில் எனது ஒரே ஒரு மகன் அம்சவர்தன் காணாமல் போயுள்ளார். எனவே எனது அன்பு மகன் அம்சவர்தனை கண்டுபிடித்து தருமாறு கோரியுள்ளார்

தகவல் தெரிந்தவர்கள் 0741344699 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு எடுக்குமாறு இளைஞனின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4