பொய்யான தகவல்களுக்கு எதிராக புதிய நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக சமூக வலைத்தளங்கள் இணக்கம்

Kanimoli
4 years ago
 பொய்யான தகவல்களுக்கு எதிராக புதிய நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக  சமூக வலைத்தளங்கள் இணக்கம்

போலி கணக்குகள் உட்பட பொய்யான தகவல்களுக்கு எதிராக புதிய நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக முகநூல் உட்பட சில சமூக வலைத்தளங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளன.

சமூக வலைத்தள ஊடகங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. 

மேடா, கூகிள், டுவிட்டர், மைக்ரோசொஃப்ட் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டுள்ளனர்.

இந்த இணக்கத்தின் அடிப்படையில், போலி கணக்குகள் உட்பட பொய்யான தகவல்களுக்கு எதிராக கடுமையான அபராதம் விதிப்பது சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

சமூக வலைத்தள ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் பொய்யான தகவல்களுக்கு எதிராக கடுமையான நடைமுறையை கையாள வேண்டும் என பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4