உணவு நெருக்கடியால் எவரையும் பசியோடு வாடக்கூடாது - ரணில் விக்கிரமசிங்க

Kanimoli
4 years ago
உணவு நெருக்கடியால் எவரையும் பசியோடு வாடக்கூடாது -  ரணில் விக்கிரமசிங்க

பிரதமர் அலுவலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

உணவு நெருக்கடியானது எதிர்காலத்தில் 4 மில்லியன் முதல் 5 மில்லியன் இலங்கையர்களை நேரடியாகப் பாதிக்கக் கூடியதாக இருந்தாலும், அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். உணவு நெருக்கடியைத் தணிக்கும் முயற்சிகளை ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தலைமையிலான குழுவொன்றை நியமிக்கவும் பிரதமர் பணித்துள்ளார்.

இந்தக் குழுவினால் தயாரிக்கப்பட்ட திட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் வெளிப்படுத்த தாம் விரும்புவதாகவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் உள்ள 336 பிரதேச செயலகங்களின் இலக்குகளை அபிவிருத்தி செய்வதற்கும் அவற்றை அடைவதற்கும் தலைமைத்துவத்தை வழங்குவதற்காக 225 பிரிவுகள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் எஞ்சியவை அமைச்சுகள் மற்றும் தனியார் துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடமும் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ். இதற்காக பிரதேச செயலகங்களில் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள முன்மொழியப்பட்டுள்ளது. மீனவ மக்களுக்கு உணவு, எரிவாயு மற்றும் எரிபொருள் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு அதிகாரிகளுக்கு  பணிப்புரை விடுத்துள்ளார்.

குறிப்பாக சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்களில் உணவுப் பாதுகாப்பிற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

பிராந்திய ரீதியில் போட்டி நிறைந்த சந்தையை உருவாக்கும் நவீன விவசாய முறைக்கான நடுத்தர மற்றும் நீண்ட காலத் திட்டத்தின் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

முன்னாள் அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, திஸ்ஸ அத்தநாயக்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், திகாம்பரம், ரிஷாட் பதியுதீன், நவீன் திஸாநாயக்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய ஆகியோருடன் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, நளின் பெர்னாண்டோ, ரமேஷ் பத்திரன மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில் தொண்டமானும் கலந்து கொண்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4