கைது செய்யப்பட்ட ஆசிரியைக்கு பிணை!

Prabha Praneetha
4 years ago
கைது செய்யப்பட்ட ஆசிரியைக்கு பிணை!

சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியை மல்லாகம் நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஆசிரியை எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக மன்று உத்தரவிட்டது.

கடந்த 10ஆம் திகதி மாணவி அடித்துத் துன்புறுத்தப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சித்தன்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த 7 வயது மாணவியே அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார்.

கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகிய மாணவிக்கு உளநல மருத்துவ வல்லுநரினால் உளநல சிகிச்சை வழங்கப்பட்டது.

மாணவியின் குடும்பத்துக்கு பண உதவியை வழங்கி இணக்கமாக முடிக்க பாடசாலை நிர்வாகம் முயற்சித்தது.

இந்த நிலையிலேயே மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் ஆசிரியை நேற்று மாலை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4