ஊடகவியலாளர் போலவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார்!

Mayoorikka
4 years ago
 ஊடகவியலாளர் போலவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார்!

நாட்டின் நெருக்கடி நிலைமைகளை மக்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் போலவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
  
பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் பிரதமரே நாட்டுக்குத் தேவை, மாறாக ஊடகவியலாளர் போல் செயல்படும் பிரதமர் நாட்டுக்கு தேவை இல்லை எனவும் அவர் இதன்போது கருத்துத் தெரிவித்தார்.

மேலும் எரிபொருளுக்காக தற்பொழுது செலவிடப்படும் நிதியை உரத்தை கொள்வனவு செய்ய செலவிட வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4