வாட்சாப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Kanimoli
1 year ago
வாட்சாப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

உலகலாவிய ரீதியில் பெருமளவிலானோரினால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்-அப் செயலி தொடர்பில் அந்நிறுவனம் புதிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.

பயனர்களின் தொடர் கோரிக்கைகளுக்கு அமைய, வாட்ஸ் அப் மெசேஜ் ஹிஸ்டரியை, ஆண்ட்ராய்டு சாதனங்களிலிருந்து ஐபோன்களுக்கு மாற்றும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் பயனர்களின்  நீண்ட நாள் கோரிக்கைக்கு அமைய இந்த வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதாவது வாட்ஸ் அப் மெசேஜ் ஹிஸ்டரியை மாற்ற ஆண்ட்ராய்டு 5 இயங்குதளத்தையும், ஐபோனில் iOS 15.5 இயங்குதளத்தையும் வைத்திருக்க வேண்டும் எனவும், ஆண்ட்ராய்டு போனில் "Move to iOS" செயலியை பயன்படுத்தி இந்த வசதியை பெற்று கொள்ளலாம் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.