சிறுவர் நோய் விசேட வைத்தியர்களின் சங்கம் பெற்றோர்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

Reha
4 years ago
சிறுவர் நோய் விசேட வைத்தியர்களின் சங்கம் பெற்றோர்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

அவசர மற்றும் அசாதாரண நிலையின்போது சிறுவர்களுக்கு  வழங்குவதற்கான மருந்துகள் அரச வைத்தியசாலையில் உள்ளது எனவே, அவ்வாறான சந்தர்ப்பங்களில் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிறுவர்களைக் கொண்டு செல்லுமாறு சிறுவர் நோய் விசேட வைத்தியர்களின் சங்கம் பெற்றோர்களிடம் கோரியுள்ளது.  

மருந்து தட்டுப்பாடு காரணமாக சிறுவர்களை அரச வைத்தியசாலைகளுக்கு கொண்டுசெல்ல பெற்றோர்கள் பின்வாங்குவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதென நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த சங்கத்தின் உப தலைவர் சிறுவர் நோய் விசேட வைத்தியர் கோசல கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில், சிறந்த சத்தான உணவுகளை பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும்.

அத்துடன், பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பிலும் பெற்றோர் அவதானம் செலுத்த வேண்டும் என நோய் விசேட வைத்தியர் கோசல கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4