துமிந்த சில்வா நீக்கம்.. வீடமைப்பு அதிகார சபைக்கு புதிய தலைவர்

Prathees
4 years ago
துமிந்த சில்வா நீக்கம்.. வீடமைப்பு அதிகார சபைக்கு புதிய தலைவர்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையின் முன்னாள் துணைத் தலைவர் ராஜீவ் சூரியாராச்சி புதிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வீடமைப்பு அதிகார சபையின் தலைவரான துமிந்த சில்வா, சிறைச்சாலை அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மரண தண்டனையை அனுபவித்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கிய விதத்தை சவாலுக்கு உட்படுத்தி உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதன்படி துமிந்த சில்வாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும் துமிந்த சில்வா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிறைச்சாலை அதிகாரிகளின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4