மாணவியை அடித்து துன்புறுத்தியதாக ஆசிரியர் மீது சிறுவர் பாதுகாப்பு பிரிவு விசாரணை

Kanimoli
4 years ago
மாணவியை அடித்து துன்புறுத்தியதாக ஆசிரியர் மீது சிறுவர் பாதுகாப்பு பிரிவு விசாரணை

  யாழ்.சித்தங்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் 2ம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியை அடித்து துன்புறுத்தியதாக ஆசிரியர் மீது சிறுவர் பாதுகாப்பு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

கடந்த 10ஆம் திகதி மாணவி அடித்துத் துன்புறுத்தப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

சம்பவத்தில் சித்தன்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த ஹர்ஷா ஜெயதீசன் (வயது -7) என்ற மாணவியே அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கடும் மன அழுத்தத்துக்கு உள்ளாகிய மாணவிக்கு உளநல மருத்துவ வல்லுநரினால் உளநல சிகிச்சை வழங்கப்பட்டதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம் மாணவியின் குடும்பத்துக்கு பண உதவியை வழங்கி , விவகாரத்தை இணக்கமாக முடிக்க பாடசாலை நிர்வாகம் முயற்சிக்கும் நிலையில், சங்கானை பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4