முறைப்படி நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுவேன் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

Kanimoli
4 years ago
முறைப்படி நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுவேன் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

மக்களுக்கு துரோகம் இழைத்து, பிரதமர் பதவி அல்லது பிற பட்டம் பதவிகளுக்கு விலைபோகும் எச்சில் துப்பும் பழக்கம் எனக்கில்லை முறைப்படி நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன்று (16) மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் உள்ள நவயாலதென்ன கடுகஸ்தோட்டை, சமுத்திராதேவி மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

"இன்று அரசாங்கம் வக்குரோத்தடைந்து விட்டதாகவும், எதிர்க்கட்சி வங்குரோத்து நிலைக்குச் சென்றுவிடவில்லை.

அவ்வாறு வக்குரோத்தடைந்திருந்தால் ஐக்கிய மக்கள் சக்தி நாட்டிற்காக மூச்சுத் திட்டம், இந்நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கான பிரபஞ்சம் வேலைத்திட்டம், பேருந்து நன்கொடை திட்டம் போன்ற சமூக நல திட்டங்களை செயல்படுத்த முடியாது.

இந்நாட்டில் கல்வி முறை முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், குறிப்பாக ஆங்கில மொழி, தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் பொறியியல் போன்ற பாடப்பரப்புகள் முறையாகவும், வினைதிறனாகவும் உருவாக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4