பெரும்போகத்திற்காக 365,000 யூரியா மூட்டைகள் விவசாய குடும்பங்களுக்கு இலவசம்

Prabha Praneetha
4 years ago
பெரும்போகத்திற்காக 365,000 யூரியா மூட்டைகள் விவசாய குடும்பங்களுக்கு இலவசம்

குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு பெரும்போகத்திற்காக 365,000 யூரியா மூட்டைகள் இலவசமாக வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) இணங்கியுள்ளது.

விவசாய சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக தேவையான உதவிகளை வழங்கும் வகையில் எதிர்வரும் காலங்களில் பல விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (WFO) இலங்கை முகவர்களுடனான கலந்துரையாடலின்போது 2022/23 பெரும்போக நெல் விளைச்சலுக்காக குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு 365,000 யூரியா இலவசமாக வழங்க இணங்கியுள்ளது.

ஒரு குடும்பத்திற்கு ஒரு உறை வீதம் நாடளாவிய ரீதியில் உள்ள குறைந்த வருமானம் பெறும் 365,000 விவசாய குடும்பங்களுக்கு இதனை விநியோகிக்க தீர்மானித்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4