அரசுக்கு சொந்தமான, பயிரிடப்படாத நிலங்களை இளைஞர்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

Nila
4 years ago
அரசுக்கு சொந்தமான, பயிரிடப்படாத நிலங்களை இளைஞர்களிடம் ஒப்படைக்குமாறு  ஜனாதிபதி உத்தரவு!

அரசுக்கு சொந்தமான, பயிரிடப்படாத நிலங்களைக் கண்டறிந்து, பயிர்ச்செய்கையில் ஆர்வமுள்ள இளைஞர்களிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரச செலவினத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பாக கொழும்பு – கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்களைப் பதிவு செய்தல், குடிவரவு, குடியகல்வு, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் உள்ளிட்ட ஏனைய அரச நிறுவனங்களையும் மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பரவலாக்குவதன் மூலம் அந்த சேவைகளை மிகவும் திறமையாக வழங்க முடியும் என்றும் இவ்வாறான முக்கிய நிறுவனங்களை ஒன்றோடு ஒன்று இணைப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் பல நாடுகள் உணவுப் பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகின்றன என்றும் நாட்டின் அறுவடை விநியோகத்தின்போது, சுமார் 40 சதவீதம் அழிக்கப்படுகிறதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக கடுமையான அவதானம் செலுத்துவதன் மூலம் பாரியளவிலான உணவுப் பொருட்களை பாதுகாக்க முடியும் என்றும் அறுவடையை விநியோகிப்பதில் இடைத்தரகர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் விவசாயிக்கும் நுகர்வோருக்கும் நியாயமான விலையை வழங்குவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசுக்கு சொந்தமான, பயிரிடப்படாத நிலங்களைக் கண்டறிந்து, பயிர்ச்செய்கையில் ஆர்வமுள்ள இளைஞர்களிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முப்படைகள், சிவில் பாதுகாப்புப் படை மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களமும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த நிறுவனங்களையும் விவசாயத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் வெற்றிகரமான பிரதிபலன்களை அடைய முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4