சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு - இலங்கை சுற்றுலா அபிவிருத்திச் சபை

Kanimoli
4 years ago
சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு - இலங்கை சுற்றுலா அபிவிருத்திச் சபை

கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு நாளாந்தம் குறைந்தது 920 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதாக சுற்றுலா அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவிலிருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என சுற்றுலா அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவெளை, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4