பெண் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு ஆண் தாதிய உத்தியோகத்தர் தொலைபேசியில் அச்சுறுத்தல்

Kanimoli
4 years ago
பெண் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு ஆண் தாதிய உத்தியோகத்தர் தொலைபேசியில் அச்சுறுத்தல்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் பெண் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு ஆண் தாதிய உத்தியோகத்தர் தொலைபேசியில் அச்சுறுத்தியமை தொடர்பில் இரு வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

நிர்வாக மட்ட விசாரணையை முன்னெடுத்து அறிக்கை வழங்குமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய்சாலை அத்தியட்சகருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, சாவகச்சேரி பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் தாதிய உத்தியோகத்தர் கடந்த புதன்கிழமை (08-06-2022) நள்ளிரவு கடமையில் ஈடுபட்டிருந்த பொது தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

அதுதொடர்பில் வைத்தியசாலை அத்தியட்சகரிடம் முறையிட்ட வழங்கிய பெண் தாதிய உத்தியோகத்தர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலும் முறைபாடு வழங்கியிருந்தார்.

சம்பவத்தையடுத்து அச்சுறுத்தியவரும் அதே வைத்தியசாலையில் பணியாற்றும் ஆண் தாதிய உத்தியோகத்தர் என பொலிஸ் புலன் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து சம்பவம் தொடர்பில் அறிக்கையளிக்குமாறு சாவகச்சேரி வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகருக்கு பணித்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், பொலிஸாரும் தனியாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4