எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை 200 ரூபாயினால் அதிகரிக்கும் - லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர்

Kanimoli
4 years ago
எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை 200 ரூபாயினால் அதிகரிக்கும் - லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர்

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை 200 ரூபாயினால் அதிகரிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் முடித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (15) காலை பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

லிட்ரோவின் விலை லாப் நிறுவனத்தின் விலையை போல அதிகரிக்கும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன,ஆனால் சமீபத்தில் அந்த நிறுவனம் விலையை மிகவும் ஆபத்தான விதத்தில் அதிகரித்தது போல நாங்கள் அதிகரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது தரையிறங்கும் எரிவாயு கப்பலை தவிற, மேலதிகமாக அடுத்த சில நாட்களுக்கு தேவையான எரிவாயுவை இறக்குமதி செய்யும் வேலைத் திட்டம் எதையும் முன்னைய நிர்வாகம் மேற்கொள்ளவில்லை எனவும் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.

இது ஒரு கவலைக்குரிய செய்தியாக இருந்தாலும், அதை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் நான் இருக்கின்றேன். இந்த கப்பல் வந்ததில் இருந்து, அடுத்த தேவையை பூர்த்தி செய்ய ஒரு கப்பல் கூட திட்டமிடப்படவில்லை.

இது பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் தனக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4