மரம் முறிந்து விழுந்ததில் 10 மாணவர்கள் வைத்தியசாலையில்

Mayoorikka
4 years ago
மரம் முறிந்து விழுந்ததில் 10 மாணவர்கள் வைத்தியசாலையில்

பாடசாலையில் விஞ்ஞானக் கூடமொன்றின் மீது தென்னைமரமொன்று விழுந்ததில், மாணவர்கள் ஒன்பது பேர் உட்பட ஆசிரியர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன்,வெலிமட இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலைக்கு பக்கத்து காணியில் இருந்த மிகப்பழமையான தென்னை மரம் ஒன்று முறிந்து, வகுப்பறையின் மீது விழுந்ததில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் வெலிமட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4