சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும்- பிரதமர் ரணில் நம்பிக்கை!

Nila
4 years ago
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும்- பிரதமர் ரணில் நம்பிக்கை!

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருடன் தான் பேச்சு நடத்தியதாகவும், அவர் உதவிகளை விரைவுபடுத்துவதாக உறுதியளித்ததாகவும் கூறியுள்ளார்.

எனவே வெளிநாட்டு கையிருப்பு பிரச்சினையை தீர்ப்பதற்கு நாணய நிதியம் இலங்கைக்கு உதவும் என தான் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ரூபாய் மற்றும் டொலர் பற்றாக்குறை நிலவுகின்ற போதும், இந்த வருட இறுதிக்குள் ரூபாயின் பற்றாக்குறையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் உறுதியளித்தார்.

மேலும் உலக உணவுத் திட்டத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் இலங்கைத் தூதுவர் மூலம் தமக்கு உறுதியளித்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4