எரிபொருள் வழங்கக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

Mayoorikka
4 years ago
எரிபொருள் வழங்கக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

எரிபொருள் வழங்கக் கோரி, தெஹிவளையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

பிரதான வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதால், கொழும்பு- காலி வீதியில் இரு பக்கங்களிலும் கடுமையான வாகன நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

பிரதான வீதியில் மட்டுமன்றி, குறுக்கு வீதிகளிலும் கடும் வாகன நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால், காலைவேளையில் காரியாலயங்களுக்கு வருகைதரவேண்டியவர்கள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லவேண்டியவர்கள் கடும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

தெஹிவளையில் மட்டுமன்றி, கொழும்பில் பல இடங்களிலும் ஆங்காங்கே எரிபொருள்களைக் கோரி, ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4