ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் விபத்து

Kanimoli
4 years ago
 ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் விபத்து

திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதி சுகதகம பகுதியில் காரொன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொஷன் நிகழ்விற்காக அனுராதபுரம் சென்று மீண்டும் வீடு திரும்பிய போதே கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரில் மூவர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றைய கணவர் மனைவி பிள்ளை ஆகிய மூவரும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4