கொழும்பில் இன்ப்ளுவென்சா நோய் தாக்கம் ஏற்படும் சிறுவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

#Colombo #children
Nila
4 years ago
கொழும்பில் இன்ப்ளுவென்சா நோய் தாக்கம் ஏற்படும் சிறுவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இன்ப்ளுவென்சா நோயின் தாக்கம் ஏற்பட்ட சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - ரிச்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

குறிப்பாக, சிறார்களுக்கு முகக்கவசம் அணிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4