கற்பாறைகளுக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு

#SriLanka #Lanka4
Shana
4 years ago
கற்பாறைகளுக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு

திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்போகம பகுதியில் கற்பாறைகளுக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் கைக்குண்டு ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இக்கைக்குண்டு இன்று (14) மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் குளத்தினை அண்டிய பகுதியில் போடப்பட்டிருந்த கருங்கற்பாறைகளுக்குள்ளே இவ்வாறு கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

அக்போபுர பொலிஸாருக்கு கிடைத்த தகவலில் அடிப்படையில் கைக்குண்டினை பொலிஸ் விசேட அதிரடைப்படையினரின் உதவியுடன் கந்தளாய் நீதிமன்ற நீதிவானின் உத்தரவின் பேரில் செயழிலக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4