கடலில் நீராடச் சென்ற மூவர் மாயம்

Prabha Praneetha
4 years ago
கடலில் நீராடச் சென்ற மூவர் மாயம்

அம்பலாந்தோட்டை – வெலிபட்டன்வில பகுதியில் கடல் அலையில் சிக்குண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மேலுமொரு இளைஞர் என மூவர் காணாமல்போயுள்ளனர்.

குறித்த மூவரும் வெலிபட்டனவில பகுதியிலுள்ள விகாரையொன்றுக்கு சென்று பின்னர், கடற்கரைக்கு சென்றபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீரில் மூழ்கி 55 வயதான தாய், 16 வயதான அவரது மகன் மற்றும் 22 வயதான இளைஞரொருவருமே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

காணாமல்போயுள்ளவர்களை தேடும்பணிகளை பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4