வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்து நால்வருக்கு நடந்த கொடுமை

Kanimoli
4 years ago
வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்து நால்வருக்கு நடந்த கொடுமை

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

காலி உடுகம பிரதான வீதியில் கொட்டவ என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது மரத்தின் பெரிய கிளை முறிந்து விழுந்ததில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யக்கமுல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இனிந்தும பிரதேசத்தில் வசித்து வரும் குடும்பத்தை சேர்ந்த 56 வயதான தாய், 58 வயதான தந்தை மற்றும் 30, 26 வயதான இரண்டு மகன்களே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்களில் தாயும் ஒரு மகனும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்துள்ள தந்தை முன்னரே கராப்பிட்டிய வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

தந்தையை வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. முச்சக்கர வண்டியை மகன் ஒருவரே ஓட்டிச் சென்றுள்ளதுடன் அவர் பல்கலைக்கழக மாணவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொட்டவ காட்டில் இருந்த 150 அடி உயரமான பழைய மரம் ஒன்று மற்றுமொரு மரத்தின் மீது சரிந்து விழுந்துள்ளது. இதனால், மற்றைய மரத்தின் பெரிய கிளை முறிந்து வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் மீது விழுந்துள்ளது.

சம்பவத்தை அறிந்து அங்கு உடனடியாக சென்ற காவல்துறையினர் காயமடைந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இதேவேளை முச்சக்கர வண்டிக்கு பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4