பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 173 கைதிகளுக்கு இன்று விடுதலை

Mayoorikka
4 years ago
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 173 கைதிகளுக்கு இன்று விடுதலை

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட விசேட பொது மன்னிப்பின் கீழ் 173 கைதிகள் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் பரிந்துரையின் பேரில் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய வெலிக்கடை, குருவிட்ட, மஹர, நீர்கொழும்பு, வீரவில, வாரியபொல, போகம்பர, அனுராதபுரம், களுத்தறை ஆகிய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

அத்தோடு, கொழும்பு மகசின், கேகாலை, மட்டக்களப்பு, மொனராகலை, யாழ்ப்பாணம், திருகோணமலை சிறைச்சாலை கைதிகளுக்கும் இன்று பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4