எதிர்வரும் 21ஆம் திகதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ள தம்மிக்க பெரேரா

Prathees
4 years ago
எதிர்வரும் 21ஆம் திகதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ள தம்மிக்க பெரேரா

பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா எதிர்வரும் ஜூன் மாதம் 21ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

அடுத்த நாடாளுமன்றம் ஜூன் 21-ம் திகதி  கூடுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தம்மிக்க பெரேராவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்து அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் என்ற வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.

அடுத்த சில நாட்களில் புதிய தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகவும் அவர் பதவியேற்க உள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு என்ற பெயரில் புதிய அமைச்சு ஒன்றை நிறுவுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜூன் 09 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளநிலையில்,  அண்மையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் இருந்து தனது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாகவும் கொழும்பு பங்குச் சந்தைக்கு அறிவித்துள்ளார்.

அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து, இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகளையும் அந்நியச் செலாவணியையும் ஈர்ப்பார் என அவர் நம்புவதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4