இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கும் முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் அமெரிக்கா தயார்! பிரதமர் அறிவிப்பு!

Nila
4 years ago
இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கும்  முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் அமெரிக்கா தயார்! பிரதமர் அறிவிப்பு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளின்கனுடன் தொலைபேசியில் உரையாடினார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் விளக்கினார்.

அமெரிக்காவுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்கும் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் இலங்கை விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கும் இலங்கையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் Anthony Blinken ஒப்புக்கொண்டார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளின்கனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4