லண்டனில் இருந்து வவுனியா சென்ற பெண் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

Nila
4 years ago
 லண்டனில் இருந்து வவுனியா சென்ற பெண் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

லண்டனில் இருந்து இலங்கைக்கு திரும்பியிருந்த நிலையில் உயிரிழந்த பெண் தொடர்பான தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 

 வவுனியா, ஆலடித் தெரு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 32 வயதான சிந்துஜா என் பெண்மணியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
 
குறித்த இளம் குடும்ப பெண் குடும்ப பிரச்சினை காரணமாக மனவிரக்தியில் தற்கொலை செய்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
குறித்த பெண்ணின் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
 

சிந்துஜாவின் மரணம் தொடர்பில்  வவுனியா பொலிஸ் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர். 
 
லண்டனில் இருந்து நாடு திரும்பியவர் வவுனியாவுக்குச் சென்று உறவினர்களுடன் வசித்து வந்தார்.
 
இந்நிலையில் திடீரென காணாமல் போயிருந்த நிலையில், அவர் வசித்து வந்த காணிக்கு அருகாமையிலுள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
32 வயதான சிந்துஜா என்ற உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் லண்டனில் வசிக்கின்றனர். மேலும் இறந்த பெண் சில காலமாக அவர்களைப் பிரிந்து வாழ்ந்து வருவதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4