எதிர்க்கட்சி கூட்டத்தில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்

Kanimoli
4 years ago
எதிர்க்கட்சி கூட்டத்தில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா பங்கேற்றுள்ளார்.

எதிர்க்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச விடுத்த அழைப்பின் பேரில் தான் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கொடஹேவா தெரிவித்தார்.

"எதிர்க்கட்சித் தலைவரால் இன்று அவருடைய அலுவலகத்தில் சீர்திருத்தவாதிகள் குழுவினால் முன்வைக்கப்பட்ட விளக்கத்தைக் கேட்க என்னை அழைத்திருந்தார்கள்.

வாக்குறுதியளித்தபடி அது அரசியல் கலந்துரையாடல் அல்ல, குறித்த கலந்துரையாடலின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலேயே தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டேன் ” என நாடாளுமன்ற உறுப்பினர் கொடஹேவா தனது டுவிட்டர் தளத்தில் கருத்து பதிவு செய்துள்ளார்.

இதேவேளை, ரவூப் ஹக்கீம், சுமந்திரன் உட்பட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4