முல்லைத்தீவில் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1-1.jpg)
முல்லைத்தீவு மல்லாவி, பாலிநகர் பகுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிய குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதோரால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் மூன்று பிள்ளைகளின் தந்தையான அழகப்பன் அமிர்தலிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



