பசில் ராஜபக்ஷவை சிறையில் அடைக்க வேண்டும் - அத்துரலியே இரத்தின தேரர்

Kanimoli
4 years ago
 பசில் ராஜபக்ஷவை சிறையில் அடைக்க வேண்டும் - அத்துரலியே இரத்தின தேரர்

நாட்டிற்கு இழைத்த குற்றத்திற்காக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சிறையில் அடைக்க வேண்டும் என எமது மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே இரத்தின தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பசில் இன்று வீட்டுக்குப் போய்விட்டார், அவருக்கு இப்போது எந்தப் பொறுப்பும் இல்லை, இவ்வாறான செயல்களை செய்த ஒருவரால் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற முடியுமா என கேள்வி எழுப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திவிட்டு சிரித்துக்கொண்டே பசில் ராஜபக்ச வீட்டுக்குச் சென்றதாகவும், இன்று நாட்டில் அவரை பற்றி எந்த விவாதமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4