இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை

#SriLanka #Murder #Lanka4
Shana
4 years ago
இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பாலிநகர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் (11) பாலிநகர் பகுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய வேளையே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபர் பாலிநகர் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அழகப்பன் அமிர்தலிங்கம் (40) என தெரியவந்துள்ளது.

சடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது மேலதிக விசாரணைகளை மல்லாவி போலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4