இன்றைய மின்வெட்டு விபரம்
Kanimoli
2 years ago
இன்று (12) ஞாயிற்றுக்கிழமை 1 மணி நேரம் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையில் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, 13,15,16,17,18ஆம் திகதிகளில் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
14 மற்றும் 19ஆம் திகதிகளில் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலம் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.