சீனிக்கும் கட்டுப்பாட்டு விலை - நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு
Prabha Praneetha
2 years ago
சீனிக்கும் கட்டுப்பாட்டு விலையை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையின் விலைகளுடன் ஒப்பிடுகையில், ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் உள்ளுர் சந்தையில் சீனியின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, நேற்று (வெள்ளிக்கிழமை) 4 வகையான அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.
அதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபாய், ஒரு கிலோகிராம் நாட்டு அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாய்.
அத்தோடு ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபாயாகவும் ஒரு கிலோகிராம் கிரிசம்பாவின் அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.